narendra modi, modi, indian prime minister-2112081.jpg

உலகமே வியக்கும் இந்தியாவின் மோடி

Please follow and like us:
Pin Share

முன்பெல்லாம் உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு இடையே  பிரச்சினை என்றால் அந்த நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவை நோக்கி பயணம் மேற்கொள்வார்கள் ..

உலகின் மிகப் பெரிய ஆளுமை நான் ஒருவனே என்று அமெரிக்காவும் அந்த நாடுகளுக்கு மத்தியஸ்தம் செய்து வைக்கும்.

ஆனால் இன்று உலக நாடுகளின்  (வல்லரசு  கூட ) தலைவர்களோ அல்லது அவர்கள் சார்பாகவோ இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவை நோக்கி வரிசையாக  படையெடுத்து வருகிறார்கள்.

சண்டை நடப்பதோ ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே ஆனால் இந்த சண்டையில் எந்தவித சம்பந்தமும் இல்லாத இந்தியாவை உலகநாடுகள் ஏன் எதற்காக  தொடர்பு கொள்கின்றன.

பேரண்டத்தில் உள்ள ஒன்பது கோள்களும் சுற்றி வருகின்றன சுருக்கமாக சொல்வதென்றால் உலகம் சுற்றுகிறது என்பார்கள்.

ஆனால் இன்று உலகமே இந்தியாவை நோக்கி இந்து மகா சமுத்திரத்தை  சுற்றி வருகின்றன.

ஆம் இன்று உலகில் வீசிக்கொண்டிருக்கும் மாபெரும் புயலில் அதன் மையப் புள்ளியாக இந்தியாவை மையம் கொண்டிருக்கிறது.

உலகின் வல்லரசு என மார்தட்டிக் கொண்ட  நாடுகள் இந்தியாவிடம் அரசியல் பேசிக் கொண்டிருக்கின்றன,

தங்களின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இந்தியாவின் உதவியையும் ஆதரவையும் கேட்டு வருகின்றன,

வளர்ந்த நாடுகள் இப்படி என்றால்,

இந்தியாவை எதிரியாக பாவித்த நாடுகள் கொரனாவின் கோரப்பசிக்கு  தங்களைப் பழி கொடுத்த  அண்டை நாடுகள் மாபெரும் பொருளாதார சூழலில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றன.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இலங்கை மியான்மர் வங்காள தேசம் மாலத்தீவு என வரிசையாக இந்தியாவிடம் உதவி கோரி நிற்கின்றன.

ஒருபக்கம் வளர்ந்த நாடுகள் அரசியல் உதவி கோரி வருகின்றன.

மறுபக்கம் இந்தியாவை சுற்றியுள்ள சிறிய நாடுகள் இந்தியாவிடம் பொருளாதார உதவி கோரி வருகின்றன,

இந்தியா எந்த நாட்டையும் பகைத்துக் கொள்ளவில்லை,

யாரையும் எதிரியாகவும் எண்ணவில்லை,

உதவி கோரி வந்த அனைவருக்கும் இந்தியா உதவி செய்து கொண்டுதான் வருகின்றது.

இந்தியாவின் இந்த ராஜதந்திர வெற்றிக்கு இந்தியாவின் இந்த மாபெரும் அரசியல் சாணக்கிய தந்திரத்திற்கு  யார் காரணம் .

நீர் நிலம் நெருப்பு ஆகாயம்  காற்று என பஞ்சபூதங்களையும் இந்தியா இன்று அடக்கியாண்டு கொண்டிருக்கின்றது.

ஆயிரம் ஆண்டுகள் அடிமை கொண்ட தேசம் இன்று உலகையே அடக்கி ஆண்டு கொண்டு இருக்கிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் தோற்றாலும் அதற்கு மோடி தான் காரணம் என்கிறார்கள்.

அரசியல் தலைவர்களின் மோசமான பொருளாதார கொள்கையினால் இலங்கையில் கலவரம் நடந்தாலும் (இலங்கை அதிபர் மாளிகை பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது)  அதற்கு மோடி தான் காரணம் என்கிறார்கள்,

ஆப்கானிஸ்தானில் 3 வேளை வயிறார சப்பாத்தி சாப்பிடுவதற்கும் மோடிதான் காரணம் என்கிறார்கள்,

ரஷ்யா உக்ரேன் மீது கடுமையான தாக்குதலை கொடுக்காமல் இருப்பதற்கும் இந்தியா தான் காரணம் என்கிறார்கள்,

என்ன சொல்ல என்னத்த சொல்ல நிம்மதி இல்லை மனிதனுக்கு நிம்மதி இல்லை என்று பைடன் பாடுவதற்கும் மோடி தான் காரணம் என்கிறார்கள்,

ஒன்றிய அரசு என்று கூறி மத்திய அரசாக மாறியதற்கும் மோடி தான் காரணம் என்கிறார்கள்,

அண்ணாமலை அசால்டாக அரசியல் பேசுவதற்கும் மோடி தான் காரணம் என்கிறார்கள்,

உலகம் முழுவதும் மாபெரும் வலை படர்ந்து வருகின்றது,

அதில் மோடி எனும் உருவம் மெலிதாக  பரந்து விரிந்து வருகின்றது,

உலகின் எட்டுத் திசைகளும் இவரின் புகழை பேசத் தொடங்கி விட்டன,

உலகின் வரலாறு  புதிதாக எழுதப்பட்டு கொண்டிருக்கிறது,

அதனை ஒருவர் அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறார்,

அவர் பேச மாட்டார் ஆனால் உலகமே அவரை பற்றி  பேசிக்கொண்டிருக்கிறது,

இந்தியாவின் பொருளாதார வெற்றிக்கும் அரசியல் சாணக்கியத்தனதிற்க்கும் பிரதமர் மோடியுடன் இணைந்து  மாபெரும் பங்காற்றி வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் மற்றும் உள்துறை அமைச்சர் இவர்களின் தன்னலமற்ற சேவை அளவிட முடியாதது,

ஒரு பத்திரிக்கையாளர்  குறிப்பாக மோடி எதிர்ப்பாளர் கடந்த வாரத்தில் அவரே சொல்லியிருக்கிறார்,

அதாவது இதுவரை இவ்வளவு பெரிய ஆளுமைமிக்க பிரதமரை இந்தியா கண்டதில்லை,

தன் கொண்ட எந்த விஷயத்திலும் பின் வாங்காதவர்,

தன்னுடைய அதிகாரத்ததின் எல்லை எது என்பதை தெரிந்து அதனை நுனிவரை சுவைக்கக் கூடியவர்,

அதாவது அவரைப் பற்றி குறைவாக அனைவரும் மதிப்பீட்டு வந்துள்ளார்கள் என்று சொல்லியுள்ளார்.

தேசத்தின் மீது முழுமையான பற்றுக்கொண்ட ஒருவனால் மட்டுமே தன் தேசத்திற்காக எந்த எல்லைக்கும் சென்று  இறுதிவரை களத்தில் நின்று போராட முடியும்,

உங்களின் சேவைக்கு இந்த தேசம் தலைவணங்கி  நிற்கின்றது,

நாங்கள் சுவாமி விவேகானந்தரை கண்டதில்லை,

நாங்கள் சத்ரபதி சிவாஜியை கண்டதில்லை,

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை கண்டதில்லை,

சாவர்க்கரை கண்டதில்லை,

ஆனால் இன்று காண்கிறோம்,

இவர்களின் மொத்த உருவமாக உங்களை,

வரலாற்றில் பண்டைய ராஜேந்திரன் சோழ மன்னரை கடாரம் கொண்டான் என்று சொல்கிறார்கள்.

நிகழ்காலத்தில் உங்களை காஷ்மீர் கொண்டான் கச்சத்தீவு கொண்டான் என்று உலகம் சொல்லட்டும்.

நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகள் அனைத்தையும் பார்க்கும் பொழுது…..

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே,என்ற பாடல்தான் நினைவுக்கு வருகின்றது.

வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.

Please follow and like us:
Pin Share

10 thoughts on “உலகமே வியக்கும் இந்தியாவின் மோடி”

 1. Do you mind if I quote a few of your posts as long as I
  provide credit and sources back to your webpage?
  My website is in the very same area of interest as yours and my visitors would genuinely benefit
  from some of the information you present here.
  Please let me know if this okay with you. Appreciate
  it!

 2. What i don’t understood is in truth how you are no longer really much more neatly-liked
  than you may be right now. You’re very intelligent. You realize therefore significantly relating to this subject, made me for my part believe it from so many numerous
  angles. Its like women and men aren’t fascinated unless
  it is something to accomplish with Woman gaga! Your individual stuffs great.
  All the time care for it up!

 3. Greetings from Colorado! I’m bored to death at
  work so I decided to browse your site on my iphone during lunch break.
  I love the knowledge you present here and can’t wait to
  take a look when I get home. I’m shocked at how quick your blog loaded
  on my mobile .. I’m not even using WIFI, just 3G ..

  Anyways, very good blog!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT
ADVERTISEMENT

Enjoy this blog? Please spread the word :)

error: Content is protected !!