Best gold saving scheme but no Gst…!

Please follow and like us:
Pin Share

வணக்கம் மக்களே, தங்கத்தை டிஜிட்டல் முறையிலும், டீமெட் கணக்கு முறையிலும், போஸ்ட் ஆபிஸ் தங்கம் பத்திரம் மூலமாக வாங்குவதற்கான சிறந்த வழிகளை..இங்கு பார்க்கலாம்..

Digital gold saving scheme and investments

தங்கத்தை நம்பகமான டிஜிட்டல் இனையதளமான, Google pay, phone pay, மற்றும் freecharge, paytm மூலமாகவும் தங்கத்தை முதலீடு செய்யலாம்..

Thanks freepik

இதன் மூலம் வாங்கும் தங்கம் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பானதாக, இருக்கும்,

இதில் நீங்கள் தங்கம் வாங்க நினைத்தால் ரூ 100 இருந்தும் கூட வாங்கலாம், நினைத்து உடனே அந்த இணையதளத்தில் என் நேரம் கூட அதில் விற்கலாம்,

ஆனால் இதில் நீங்கள் தங்கம் வாங்கும் போது உற்பத்திக்கான கட்டணமோ எந்தவித கட்டணம் கிடையாது, ஆனால் தங்கம் வாங்கும் பட்சத்தில் இதற்கு gst 3% கட்டணமாக செலுத்த வேண்டும்,

இதனை நடத்தும் மூன்று நிறுவனமான safe gold, Augmont gold, mmtc-pamp, இன்று வரை நம்பகமான கம்பெனி, ஆனால் இவை RBI, மற்றும் SEBI கட்டுபாட்டில் இல்லை..

இதனை முதலீடுகளுக்கான முறையில் பயன்படுத்தவது நல்லது, உடனடியான தேவைக்கு என் நேரத்தில் கூட அன்றைய விலையில் விற்பதால் இந்த டிஜிட்டல் முறையில் வாங்கும் தங்கம் சில தருணங்களில் கைகொடுக்கும்..

Sovereign gold bonds better schemes

இதன் முறையில் வாங்கப்படும் தங்கம் பாண்டு முறையில் முதலீடு, செய்யலாம். முழு‌க்க முழு‌க்க RBI கட்டுபாட்டில் இருக்கின்றன..

Thanks unsplash

இதற்கான உற்பத்தி, GST, பாதுகாப்புக்கான, மற்றும் insurance போன்ற எந்தவித கட்டணமில்லாத ஓரு சிறந்த முதலீடாக பார்க்கபடுகிறது..

நீங்கள் தங்க பாண்டு வாங்க நினைத்தால் இவர்களுடைய இனையதளம் மூலமாக அல்லது, Bank, post office, மூலமாக வாங்கலாம், இதை இனையதள வாயிலாக வாங்கும் பட்ச்சத்தில் ஒரு கிராமிற்கு 50 ரூபாய தள்ளுபடி கொடுக்கபடுகிறது..

இதனை வாங்க RBI அறிவிக்கப்பட்ட நாளில் மட்டுமே வாங்க முடியும்.. இந்த முறையில் வாங்கும் தங்கம் 1,2,கிராம் அடிப்படையிலான கணக்கில் மட்டுமே வாங்க முடியுமே தவிர எடை குறைவாக வாங்க இயலாது..

இதற்கு வருடத்திற்கு 2.5% வட்டி கிடைப்பதோடு மட்டுமில்லாமல் தங்க விலை ஏற ஏற இதன் மதிப்பு கூடும்..

இந்த முதலீடுகளுக்கான வைப்பு கால வரம்பு 8 அல்லது 5 வருடங்கள், வைத்திருக்கலாம், அல்லது அன்று விலையோ அந்த விலைக்கே எங்கு வாங்கினோமோ அங்கே விற்கலாம்.

இதனை வைத்திருந்து விற்கபடும்போது உங்களுக்கு வரி சலுகை அளிக்கப்படுகின்றன..

இந்த SGB தங்க பாண்டு வாங்க நீங்கள் ஒரு டீமெட் கணக்கு இருப்பது சிறப்பானதாக இருக்கும், விற்கின்றன போது சிரமப்பட அவசியம் இருக்காது..

உங்களுக்கு என்று அவசரமாக பணம் தேவைப்படுகிறதோ அன்று நீங்களே விலை நிர்ணயம் செய்து டீமெட் கணக்கு மூலம் அதிகபடியான விலைக்கு கூட விற்கலாம், இது ஒரு சிறந்த வழி, ஆனால் இது உங்கள் அதிர்ஷ்டத்தை பொறுத்து..

Gold ETF stock market of gold saving scheme

இந்த முறையில் தங்கத்தில் முதலீடு செய்ய உங்களுக்கு ஒரு டீமெட் கணக்கு அவசியம்,

பங்குச்சந்தை போல இது ஒரு தங்க முதலீடு திட்டம் தான், ஆனால் அன்றாட தங்க விலை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை..

இவையும் RBI கட்டுபாட்டில் இருக்கின்றன கூடியவை தான், நம்பகமான திட்டம்..

இதுபோன்ற இன்னொன்று Gold mutual fund திட்டம் உள்ளது,

முதலீட்டுக்கான தங்கம் வாங்க தற்போது மக்களிடைய இத்திட்டமானது பிரபலமாக வருகிறது, தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இதில் பாதுகாப்பிற்காக எந்தவிதமான பிரச்சனை இல்லாததால், ஓரே காரணம்..

மிக முக்கியமான விஷயம், மக்களே இவையனைத்தும் டிஜிட்டல் முறையிலும், பங்குச்சந்தை மூலமாகவும் வாங்கவும் உடனே விற்கவும் முடியும், ஆதலால் முக்கியமாக நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், இவைகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை..திட்டம் சார்ந்த ஆவணங்களை கவனமாக படிக்கவும்..

Please follow and like us:
Pin Share

6 thoughts on “Best gold saving scheme but no Gst…!”

  1. You’re so awesome! I don’t believe I have read a single thing like that before. So great to find someone with some original thoughts on this topic. Really.. thank you for starting this up. This website is something that is needed on the internet, someone with a little originality!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT
ADVERTISEMENT

Enjoy this blog? Please spread the word :)

error: Content is protected !!