பெண் 11 வயதில் பூப்படைந்து 45 வயது வரை அவள் நித்தம் நித்தம் போராடி மாதவிலக்கு சுழற்சி வரும் வேலையில் அந்த வழியை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிடாலாம் “வழி என்று” அதை அனுபவிக்கும் பெண்களுக்கு தான் தெரியும்..
Pills to stop menstruation immediately
இந்த கேள்விக்கான பதில் உடனடியாக கேட்கக்கூடிய மாத்திரை வேனும் எல்லாருமே நினைப்பீங்க, பெண்கள் இந்த நேரத்தில் எவ்வளவு துடியாய் துடிப்பாங்க அந்த வழி வரும்போதுதான் தெரியும், இதை உடனடியாக நிறுத்த மாத்திரை இருந்தாலும் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமால் அடிக்கடி பயன்படுத்தவது கூடாது, இயற்கைக்கு மீறிய செயலாகும்.. இதற்கு இயற்கையான வைத்திய முறைகளை நிறையா இருக்கின்றன சற்று சுருக்கமாக இங்கு பார்க்கலாம்…
மாதம் மாதம் 28 நாட்கள் ஒருமுறை சரியான முறையில் மாதவிலக்கு சுழற்சி வந்தால் உடல் ஆரோக்கியம் தான். இதில் ஒருவருக்கு மாதம் இரண்டு முறைகள் வரலாம் அல்லது மூன்று மாதம் ஒருமுறைகள் கூட வரலாம், இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனை கல்யாணத்திற்கு பிறகு “குழந்தையின்மை” இதற்கு காரணமான, அன்றாடம் இப்ப நாம் சாப்பிடக்கூடிய உணவு முறைகள் காரணம், சத்தான உணவுகள் மிகவும் அவசியம்.
இரத்தப் போக்கின் போது அந்த வழிகளை தாங்கக்கூடிய சத்தான உணவுகளை எடுத்து கொள்வது மூலம், தான் நமது உடலுக்கு வலிமையை கொடுக்கும்.. நாம் சரியான உணவு முறைகளை கையாலும் போது மாதவிலக்கு சுழற்சி சரியான முறையில் வருகின்றன போது அந்த பெண்ணின் கருமுட்டையானது ஆரோக்கியமானதாக இருக்கும்..

மாதவிலக்கு பற்றிய நீங்கள் இன்னும் அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ள நினைத்தால், இதை படிக்கவும்,
Natural remedies
நாம் வீட்டில் தினம்தினம் பயன்படுத்துகின்றன, ஒவ்வொன்றிலும நமது இயற்கையான வைத்திய முறைகள் நிறைவே இருக்கின்றன, அக்கால பெண்மணிகள் இது போல் உறவுமுறை கையாண்டு தான் 10,12 பிள்ளைகளை ஈன்றுள்ளன.. இன்னும் சொல்ல போனால் அவர்களுக்கு இதை பற்றி தெரிந்து இருக்க கூட வாய்ப்பில்லை..
- வெந்தயம்
- இஞ்சி
- கொத்தமல்லி விதை
- சீரகம்
- பெருஞ்சீரகம்
- எள்
வெந்தயம்,

மிக முக்கியமான அருமருந்தாகும் , இரவில் ஒரு டம்பளர் தண்ணீரில் உற வைத்து மறு நாள் காலையில் பருகுவதால். மாதவிடாய் சுழற்சி தூண்டுவதற்கும் உடலில் உள்ள வெப்பத்தை குறைப்பதோடு கை கால் வழி, எலும்புகளுக்கும், வயிறு வலி, சருமம் சம்பந்தமான பிரச்சனைகளில் மிகவும் ஆறுதல் தருவதாக வல்லுனர்கள் கருதுகின்றன..
இஞ்சி, நாம் தினந்தோறும் அன்றாட காலையில் பயன்படுத்தக்கூடிய ஒன்று தான், இஞ்சியை தேநீரில் அல்லது தேனுடன் கலந்து இஞ்சி சாறுகாகவோ, வெறும் இஞ்சியை தேனுடன் கலந்து பருகலாம்..

வழக்கமான வரும் மாதவிலக்கின் போது இஞ்சி சாறையை தண்ணீருடன் சிறிதளவு கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.. மாதவிடாய் ஓட்டத்தை தூண்டும் பண்புகளை கொண்டதாகவும், அமிலத்தன்மை அதிகமாக உள்ளதால் இஞ்சியை முறையாக பயன்படுத்துவது அவசியமான மூலிகையாகும்..
கொத்தமல்லி விதை,
ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக உள்ளவர்களுக்கு அருமையான மூலிகை மருந்தாகும், இரண்டு கப் தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை போட்டு ஒரு கப் வற்றும் வரை கொதிக்க வைக்கவும்,

பின்பு விதைகளை வடிகட்டி தண்ணீரை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கலாம், ஒழுங்கற்ற முறையில் வருகின்றன, மாதவிடாய் பெண்களுக்கு ஒரு வாரம் முன்னதாக தினமும் பருக ஆரம்பிக்கலாம்.. அதிகம் மருந்துவ தன்மையுள்ள மூலிகை ஆகும்..
சீரகம்,

இதனுடைய வேலை உடலின் உள்ள உறுப்புகளை சீராக வைத்து இருப்பதற்கு முக்கியமான காரணம் சீரகம், தான், இந்த சீரக்கதை எந்தளவுக்கு பயன்படுத்திகிறோமோ அந்தளவுக்கு நல்லது.. வயிறு மற்றும் கருப்பை சம்பந்தமான பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும்..
பெருஞ்சீரகம்,

ஒரு கப் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதையை இரவு முழுக்க உற வைத்து அந்த தண்ணீரை வடித்து குடிக்கலாம்..இதை கொதிக்க வைத்துக் கூட உடனடியாக தேநீர் போல் தயாரித்த, காலை வெறும் வயிற்றில் பருகலாம்..இது விடாயை ஒழுங்குபடுத்துவதோடு ஆரோக்கியம் தரும் இந்த சேர்புத் தண்ணீர்…
எள்,
இது எல்லாரும் வீட்டில் அன்றாடம் பயன்படுத்த கூடியது ஒன்று தான், இது மாதவிலக்கை வேகமாக தூண்டுவதும், கூட..ஆனால் இதை சூட்டை ஏற்படுத்தும் என்பதால் இதை குறைவாக எடுத்து கொள்வது நல்லது..
தினமும் பருகுவதால் உங்கள் மாதவிலக்கு 15 நாட்களுக்கான முன்பே எடுத்து கொள்வது நல்லது, தினந்தோறும் இரண்டு வேலை சூடான நீரில் ஒரு தேக்கரண்டி எள் பயன்படுத்தி குடிப்பதால் மிகவும் நன்மை அளிக்கிறது.. மாதவிலக்கின் போது..

வைட்டமின் சி, நிறைந்த உணவுகளும் தினமும் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பலன்களை தரும், இந்த மாதிரியான உணவுகளை உட்கொள்வதால் உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கின்றன, இதன் மூலம் மாதவிடாய் தூண்டும் ஆற்றல் கொண்டது..

ஹார்மோன்கள் சமநிலை அளவு கருப்பைச் தூண்டுவதோடு இரத்தப் போக்கின் அளவை அதிகரிக்கின்றன.. வைட்டமின் சி புரோஜெஸ்ட்டின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் கருப்பைச் சுவர்களின் முறிவைத் தொடங்கி, மாதவிடாய் முன்பே வர வழிவகுக்கிறது, நீங்கள் இது போல் உணவுகளை சாப்பிட உங்களுக்காக நன்றாக மாற்றங்கள் தெரியும்.. இது போக தினமும் பேரீச்சை பழம், முருங்கை கீரை, அனைத்தும் கீரை வகைகளும் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்து கொள்வது…இன்னும் சிறப்பானதாக ஆரோக்கியம் தான்..
ஆண்களைவிட பெண்களுக்கு தான் வழி வேதனை அதிகம், எல்லாவற்றையும்விட ஒரு பெண்னையும் ஆனையும் சுமப்பவள் பெண் தான்.. காலையில் இருந்து இரவு தூங்கும் வரை வீட்டில் பெண்களுக்கு வேலை வேலை..தான் அவர்களுடைய கஷ்டத்தை என்றாவது யோசித்து உண்டா…
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.