முழுமுதற் கடவுளான விநாயகரே முழுமனதாக இந்நாளில் வழிபட்டு எல்லா செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோமாக..
இன்று விநாயகர் சதுர்த்தி விழா,
இந்நாளில் விநாயகர் பிறந்த நாளான அவருக்கான பிடித்து உணவுகளை கொழுகாகட்டை, சுண்டல், பொரி, பழங்களை படைத்து மனதார வழிபட்டால் எல்லாம் துன்பங்களை நீக்கி அருள் புரிவார்,
விநாயகர் துதி,
- பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிகை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய் துங்கக் கரிமுகத்துக் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா..
- வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு..
- திருவாக்கும் செய் கருமம் கை கூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவார்தம் கை..
- இன்றெடுத்த இப்பணியும் இனித் தொடரும் எப்பணியும் நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து என் பணியை உன் பணியாய் எடுத்தாண்டு எமைக் காக்க பொன் வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்
- உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி..! ஒண்டலிற் றேனமதத் துணர்வூறி..! இன்பரசத் தேனயருகிப் பலகாலும்..! என்றனுயர்க் காக வனத் தணைவோனே…! தந்தைவலத் தாலருள்கைத் கனியோனே…! அன்பா தமக் கான நிலைப் பொருளோனே…! ஐந்துகரத் தானை முகப் பெருமானே…!
விநாயகர் சதுர்த்தியின் கதை,
இந்தியாவில் பல பண்டிகை கொண்டாடினாலும், விநாயக பெருமானை நினைக்காத ஆளில்லை..எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் விநாயகர் முதலில் வணங்குவோம்..
ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடபடுகிறது, இவ்விழா ஆனது சத்ரபதி சிவாஜி காலத்திலே நடத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லபடுகிறது..
சதுர்த்தி என்பது, சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டது, இந்துக் காலக் கணிப்பு படி 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையிலான வரும் ஒரு நாளாகும். இந்த நாட்கள் (திதி) என்னும் பெயரிலான அழைக்கப்படுகிறது, அமாவாசை நாட்களையும் (பெளர்ணமி) அடுத்த வரும் நான்காவதாக நாள் திதி சதுர்த்தி ஆகும்..சதுர் என்ற வடமொழி சொல் நான்கு சொல்லப்படுகின்றன. 15 நாட்களுக்கு ஒரு முறை வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.
மாதம் 30 நாட்களை கொண்ட சந்திரன் வருகின்றன அமாவாசை அடுத்த நாள் முதல் பெளர்ணமி ஈடாக உள்ள சுக்கில பட்சம் என பொருள்படும்..வளர்பிறைக் காலத்தின் நான்காம் நாளும் பெளர்ணமி அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடியும் போது கிருட்ண பட்சம் என பொருள்படும்..தேய்பிறை காலத்தின் நான்காவது நாளும் இரண்டு முறைகள் சதுர்த்தி திதி வரும்.. அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தி சுக்கில பட்சச் சதுர்த்தி என்றும், பெளர்ணமி அடுத்து வரும் சதுர்த்தி கிருட்ண பட்சச் சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகின்றன…
இவ்விழாவனது தமிழகத்தில் வெகு விமரிசையாக காலங்காலமாக கொண்டாடப்படுகிறது..
இன்றைய நாளில் விநாயக பெருமானை உள் அன்போடு உருகி வழிபட்டு எல்லாம் செல்வங்களை பெற்று நோய்நொடின்றி இன்புற்று வாழ்வோமாக…