தங்க நகைகள் என்றால் பெண்களுக்கு ஒரு ஆசை தான் குறிப்பாக இந்திய பெண்களுக்கு… இதை காரணமாக வைத்து இப்போது நிறைய மோசடிகள் நடைபெறுகின்றன..
தங்க நகைகளில் மோசடி நடப்பது எப்படி,
நீங்கள் முதலில் தங்க நகைகளை வாங்க நினைப்பது பார்க்க பார்வையாக இருக்க வேண்டும், எடை குறைவாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள், அது தான் தவறு இதில் தான் அதிகமாக மோசடிகள் நடக்கின்றன, இவை அனைத்தும் மிஷன் Hollow rope செயின்கள்..
குறிப்பாக தங்க போல் செயின்கள் பார்க்க பார்வையாக இருக்கும் இதில் கலக்கப்படும், ஒரு வித பவுடர் சாலிடர் பயன்படுத்த படுகிறது, இவை அனைத்தும் மிஷன்களால் செய்யபடுபவை, நீங்கள் வாங்கிய எடையில் இருந்து, 24.000 கிராம் செயின்க்கு 2 கிராம் சேதம் செய்கூலி எல்லாம் கொடுத்து வாங்கி இருப்பீர்கள்,
அப்படி என்றால் நீங்கள் எப்போதாவது மாற்ற நினைத்தால் எப்படியும் 3 கிராம் எடை கண்டிப்பாக குறையும், உதாரணமாக 24.00+2.000=26.000×4800=124,800 நீங்கள் வாங்கிய விலை, திரும்பவும் வெளிய விற்க போனால், 24.000-3.000=21.000×4800=100,800 இந்த கணக்கு போட்டு பாருங்கள் எவ்வளவு நஷ்டம் ஆகும் உங்களுக்கே தெரியும்..
இதிலிருந்து தப்பிப்பது எப்படி நீங்கள் எந்த நகைகடையில் எங்கு வாங்கினீர்களோ அங்கே கொடுத்து மாற்றுவது சிறந்தது..
எந்த மாதிரியான நகைகள் வாங்குவது,
காலங்காலமாக கைகளால் பொற்கொல்லரால் செய்யபடும் நகைகள் வாங்குவது சிறந்து.. இவை அனைத்தும் செயின்கள் ஒவ்வொரு வளையமும் தனிதனியாக பற்றவைத்து, இப்போது சுத்தமான 24 காரட் தங்கத்தில் zinc என்ற உலோகத்தால் பற்ற வைக்கபடுகிறது.. இதுபோல் செய்யக்கூடிய நகைகள் தினந்தோறும் அணியக்கூடிய உறுதியான நகைகளால் இருக்கும்..
மேலும் சமீபகாலமாக நடக்கும் செயின் பறிப்பு குற்றங்களில் பறிக்கப்படுவது இந்த hollow rope செயின் வகைகள் என்று ஒரு ஆய்வு அறிக்கையில் கூறுகின்றன..
நாள்தோறும் தங்கம் வெள்ளி விலையை அறிய
எந்த மாதிரி நகைகளை பார்த்து வாங்குவது,
நிறைய எனாமல் உள்ள தங்க நகைகள் வாங்காதீர்கள், பிறகு குறிப்பாக பெரிய கல் நகைகளாக உள்ள தங்க நகைகளை தயவுசெய்து பார்த்து வாங்குங்க அல்லது கல் எடை கழித்து கேட்டு பார்த்து வாங்குங்கள்..ஏனென்றால் கல் எடையும் எனாமல் எடையும் கழிப்பது கிடையாது பெரிய பெரிய நகைகடையில்..
காலங்காலமாக, பார்க்கின்றன பொற்க்கொல்லர், நகைவியாரிகளுக்கு நன்றாக தெரியும். நகை பற்றி பார்த்தாலே சொல்லி விடுவார்கள்,இவர்களுக்கு இது கைவந்த கலை..எந்த நகை உறுதியானவை உறுதியற்றவை, ஆனால் இப்பொழுது கார்ப்பரேட் நகைகடைகாரகளுக்கு தெரியாது..
கைகளால் செய்யபடும் கயிறு செயின், போல் செயின், MRT செயின், மில்லர் கிளாஸ், கட்டிங் செயின், கொடி செயின், மில்லர் குண்டு செயின், டெலிவிஷன் கட்டை, கெட்டி வளையல்கள், கெட்டி மோதிரம், இது போல் நிறைய பழங்கால நகைகள் உள்ளன, இது போல் கைகளில் செய்யப்பட்ட நகைகளாக உங்கள் ஊரில் காலங்காலமாக விற்பனை செய்யும் நகைகடையில் கேட்டு வாங்குங்கள்..
நீங்கள் வாங்கிய நகைகளை எப்படி சரிபார்பது,
தற்போது இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஹால்மார்க் சென்டர் என்று ஓன்று உள்ளது, அங்கே நேரடியாக சென்று உங்கள் நகைகளை போட்டோ டெஸ்டிங் முறையில் சரிபார்த்து கொள்ளாலாம்.. அல்லது உங்களுக்கு சந்தேகம் இருப்பின் கன்ஸ்யூமர் கோர்ட் புகார் அளிக்கலாம்..
தங்க தாலி வாங்கு முன் கவனிக்க வேண்டியவை,
புதுமண தம்பதிக்கு கல்யாணத்திற்கு தாலி என்ற பாரம்பரியமாக அணிய கூடிய ஒன்று நமது கலாசாரம் மிக்க ஒன்று காலங்காலமாக நமது மனைவிகள் அணியக்கூடிய, (மாங்கல்யம்) தங்க தாலி 22k 916 தங்கத்தில் வாங்குவது விட 20k தங்கத்தில் செய்வதே மிகச்சிறப்பாக உறதி தன்மையுடன் இருக்கும்..
இது விஷயம் நகைக்கடையில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும்..
எந்தெந்த நகைகடையில் வாங்குவது சிறந்தது
உங்கள் ஊரில் பாரம்பரியமாக நகை வியாபாரம் செய்யக்கூடிய நகைகடையில் வாங்குதல் என்பது சரியான முடிவு. இவர்களிடம் எந்தவிதமான விளம்பரம் இல்லாமால், நியாயமான முறையில் நகைகளாக விற்பனை செய்யக்கூடியவர்கள்..
நகைக்கடை விளம்பரத்தை பார்த்து அங்கே குறைவாக இருக்கு, இங்கே கூடுதலாக இருக்கு யோசிக்க கூடாது, நகையை தரத்தை மட்டுமே பார்க்க வேண்டும்..
முதலீடுகளுக்கான தங்கம் வாங்குவது எப்படி?
நன்றாக முதலீடு செய்யலாம், தங்க நகைகளாக வாங்காமல் தூய்மையான தங்கம் அல்லது தங்க காயின் 1 கிராம் 2 கிராம் என்ற முறையில் வாங்கி சேமிக்கலாம். ஆனால் இப்பொழுது 3% GST உண்டு.. online டீமேட் கணக்கில் மூலமாக கூட வாங்கலாம், பிறகு வருடத்திற்கு ஒருமுறை போஸ்ட் ஆபிஸ் தங்க பத்திரம் திட்டம் மூலமாக முதலீடு செய்ய சிறந்தது, இதற்கு GST கிடையாது.
அல்லது உங்களுக்கு நன்றாக தெரிந்த நகைபட்டறையில் தங்கம் வாங்கலாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவதற்கான இதுவும் ஒரு சிறந்த வழி.. அதிக நாள் வைத்திருந்து விற்பது தான் நல்ல லாபத்திற்காக வழி, ஆனால் விலை குறைந்து விட்டது பயப்பட கூடாது, விலை ஏறிவிட்டது சந்தோஷ பட கூடாது…
மேலே சொன்னது போல் எந்த நகைக்கடையில் நகை வாங்கினாலும் அதை ஹால்மார்க் சென்டரில் சரிபார்த்து கொள்ளலாம்..மக்களே
விலையுயர்ந்த பொருள் என்பதால் மோசடி என்ற ஒன்று எல்லாம் நகைகளில் நடக்கக்கூடிய ஒன்று தான், நீங்கள் சரியான நகைகடையிலும், அல்லது நகைகளை சரியானதே தேர்ந்தெடுத்து வாங்குவது உங்கள் கையில்…! தயவுசெய்து விளம்பரத்தை பார்த்து ஏமாறாதீர்கள்..
நாங்கள் சில விஷயங்களை நாங்கள் சூட்சுமமாக சொல்லி இருக்கிறோம்..புரிந்து கொள்ளுங்கள்…
இது போல நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள எங்கள் இணையதளத்தை பின் தொடருங்கள்..