நமது உடல் எடை திடமாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க கொண்டைக்கடலை பெரிதும் உதவுகின்றன..
நாம் தினமும் கொண்டைக்கடலை உட்கொள்வது மூலமாக ஏற்படும் பயன்கள்..
இதில் கறுப்பு நிற கொண்டைக்கடைலை மிகவும் சிறந்தது..
கொண்டைக்கடலையில் முழுக்க புரதமும் நார்ச்சத்தும் நிறைந்த தானியமாகும்.
உடலை வலுவாகவும் உறுதியாக வைத்துக் கொள்ளவும் மட்டும் உதவுகிறது என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால் கொண்டைக்கடலை உடல் எடைடையக் குறைக்க பெரிதும் உதவுகின்றன.கொண்டைக்கடலையில் புரதச்சத்து, தாமிரம், பைட்டோ நியூட்ரியன்கள், ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.
பசியைக் கட்டுப்படுத்தி கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவி செய்கிறது. இதை முறையாக சாப்பிட்டா உடல் எடையை ஆரோக்கியமாகக் குறைக்க முடியும்.
ரத்த அழுத்தத்தை சீராக்க பெரிதும் உதவுகின்றன.
கொண்டைக்கடலையில் நிறைய தாதுப்புக்கள் இருக்கின்றன. குறிப்பாக, கொண்டைக்கடலையில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன..
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றது
பொதுவாக உயர் ரத்த அழுத்தம் உண்டாக அடிப்படைக் காரணமே மன அழுத்தம் கூட, உடலில் கெட்ட கொலஸ்ட்டிரா அளவு அதிகமாக இருப்பதுமே காரணம்,கொண்டைக்கடலையில் உள்ள பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது.
அஜீரணக் கோளாறால் உள்ளவர்கள்,
தினமும் கொண்டைக்கடலையில் உண்பதால் இருக்கும் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. ஆனால் புரதமும் நார்ச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் மிக அதிக அளவில் இருக்கின்றன..
இயல்பாகவே உடல் எடையைக் குறைக்கப்பதற்கு முயற்சி செய்பவர்கள், தங்களுடைய உணவில் பெரும்பாலான நார்ச்சத்து நிறைந்த இதுபோன்ற தானியத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அப்படி நீங்கள் எடுத்துக் கொள்வதால் ரத்தம் சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். மெட்டபாலிசமும் அதிகரிக்கும். இதனால் அஜீரணக் கோளாறு, மற்றும் மலச்சிக்கல், போன்ற பிரச்சினைகள் தீரும்.
கொழுப்பு படிவதை தடுக்கின்றன.
கொண்டைக்கடலையில் மிக அதிக அளவிலான ஆன்டி – ஆக்சிடண்ட்டுகளும் பைட்டோ நியூட்ரியன்களும் இருக்கின்றன. அவற்றோடு ஃபோலிக் அமிலம், மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் இது ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு உடலில் கெட்ட கொழுப்புகள் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது.
more detail body weight
காலை வெறும் வயிற்றில்,
எடை குறைக்க நீங்கள் முயற்சி செய்பவர்களாக இருந்தால், இரவு நேரத்தில் கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் பச்சையாக சாப்பிட வேண்டும். அந்த தண்ணீரையும் கீழே வீணாக்காமல் குடித்தால் முழுமையான சத்துக்கள் கிடைக்கும்.
இதை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதோடு அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்க முடியும்.அதனால் இயல்பாகவே உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகள் நீங்கின்றன.
எப்படி உட்கொள்வது…
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கொண்டைக் கடலையை காலை நேரத்தில் எடுத்துக் கொ்ளவது மிக சிறந்தது.
முதல் நாள் இரவு தேவையான அளவு கொண்டைக்கடலை தண்ணீரில் சராசரியாக ஏழு மணி நேரத்திற்கு கொண்டைக்கடலையை நன்கு ஊறவைத்துக் கொள்ள வேண்டும். அந்த ஊறிய கடலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பல் துலக்கிய பிறகு சாப்பிடலாம்.
இதை சாப்பிடும்போது காலையில் டீ, காபி போன்ற சூடான பானங்களைக் குடிக்கக் கூடாது. கடலை ஊறவைத்த தண்ணீரைப் பயன்படுத்தி, மதிய உணவுக்கு முன்பாக சூப் செய்து குடிக்கலாம்.
மாலை நேரத்துல
சிற்றுண்டியாக எடுத்துக் கொள்பவர்களுக்கு வேகவைத்த கொண்டைக் கடலையைச் சாப்பிடக் கொடுக்கலாம்.
வேகமாக எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள் முதல் நாள் இரவே ஊறவைத்த கடலையை முளை கட்டி வைத்து, அடுத்த நாள் காலையில் எடுத்துக் கொள்வது மிக சிறந்தது. இந்த கடலையை சாப்பிட்டு முடித்ததும் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் சாப்பிட வேண்டும். சாப்பிட்டதும் உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது.
15 நிமிடங்கள் கழித்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த முறையைப் பின்பற்றி வந்தாலே உடல் எடை குறைக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
காலை உணவுக்குப் பதிலாக,
கொண்டைக்கடலையை சிறிது தக்காளி, ஆப்பிள், வெள்ளரிக்காய் ஆகியவற்றுடன் சேர்த்து கலந்து சிறிது உப்பு, சீரகத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து சாலட்டாக எடுத்துக் கொள்ளலாம்.
இது பசியைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். மிக சிறந்த சிற்றுண்டியாகவும், உடலுக்கு நன்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக இருக்கின்றன..
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/pl/register-person?ref=V3MG69RO
Your article helped me a lot, is there any more related content? Thanks!