ஒரு காலத்தில் வீடு வாங்குவது எளிமையாக இருந்தன.ஆனால் இன்றோ அதிகமான விலை அதிகமான கடன் வாங்க வேண்டிய சூழல் நாம் இந்த கடனை அடைக்க நமது பாதி காலமே முடிந்து விடும்..
வீட்டை கட்டி பார் கல்யாணம் செய்து பார்
என்ற சாதாரண வார்த்தை இல்லை, நமது முன்னோர்கள் நன்கு அனுபவித்த எழுதிய இந்த வார்த்தைகள் தான்..
ஆனால் இன்றைய சூழலுக்கேற்ப நாம் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவது என்பது எளிதான காரியமல்ல ஒவ்வொரு குடும்ப தலைவனுக்கு தெரியும், படும் கஷ்டம், ஆண்களுக்கு தான் தெரியும்.
எப்படியோ கஷ்டபட்டு வங்கியில் கடன் வாங்கி வீட்டை வாங்கி விடுகிறோம். ஆனால் கணக்கு போட்டு பார்த்தால் தலையே சுற்றி விடும்.. நாம் வங்கியில் வாங்கி கடன் மேல் இரண்டு மடங்காக கட்ட வேண்டியதாக இருக்கும்..
இன்றைய சூழ்நிலை வீடு வாங்கலாம் வேண்டாம், என வாங்குவதற்காக, நாம் ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டியதாக இருக்கு
வீட்டு கடனை அடைப்பதற்காக சில எளிய வழிகளை பார்க்கலாம்.
அஞ்சலக சேமிப்பு
முதலில் உங்கள் வீட்டு செலவுகளை தீர்மானிங்கள், உங்கள் செலவு போக உங்களிடம் எவ்வளவு பணம் இருக்குமோ அதில் மிச்சம் இருக்கும் பணத்தை மாதம் சேர்க்க முடியும் என்றால் அந்த பணத்தை உங்கள் அருகிலுள்ள அஞ்சலக துறையில் RD கணக்கில் மாதம் உங்களால் 1000 முதல் 10000 ரூபாய வரை சேமிக்க சிறந்தது.இதில் சேமித்த பணம் உங்களுடைய வீட்டு கடனுக்கான அசல் கணக்கில் வரவு சிறந்த உதவியாக இருக்கும்..
மியூச்சுவல் பண்ட் முதலீடு
இது மிகச்சிறந்த முதலீடாக அதிகம் லாபகரமான முதலீடாக என்றே சொல்லலாம், மாதாந்திரம் மியூச்சுவல் பண்ட் sip முலமாக சிறந்த பண்ட்களை அதிக வருடம் தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்வது சிறந்த ஒன்று. பல லட்சம் சாம்பத்தித்த நிறைய பேர் உள்ளனர். முதலீடு செய்ய நினைப்பவர்கள், நீங்கள் நம்பகமான ஆப்ஸ் மூலமாகவோ, அல்லது வங்கி மூலம் செய்வது நல்லது..
24 k தங்கம் சேமிப்பு.
நீங்கள் தங்கத்தில் முதலீடாக செய்ய நினைத்தால் மாதம்தோறும் 1 கிராம் 2 கிராம் அல்லது சிறுக சிறுக உங்களால் முடிந்தளவுக்கு வாங்கி வையுங்கள்.தங்க நகைகளாக வாங்காமல் சுத்தமான தங்கம் 24 காரட் பிஸ்கட்கவோ அல்லது உங்களுடைய ஊரில் தெரிந்த நகைகடையிலோ நகைப்பட்டறையிலோ வாங்குவது சிறந்து.தங்கம் என்றுமே தனித்துவம் என்னென்று மிகச்சிறந்த முதலீடாக கருதலாம்.
ஏலச்சீட்டு பணம் கட்டுவது,
இது மிகச்சிறந்த வட்டி இல்லாத கடன் சொல்லலாம், நீங்க கடனை அடைத்துவிட முடியும், பணத்தை அசலாகவும் அடைத்துவிடலாம் மிக குறைந்த மாதத்தில், நம்பகமான இடத்தில் ஏலச்சீட்டு போடுவது சிறப்பு குறைந்தபட்சம் 20 மாதம் நடத்த கூடிய நண்பர்களிடம் சீட்டு போடுவது சிறப்பு ஏன்றென்றால் மாதம் கட்டும் பணம் கொஞ்சம் குறைவானதாக இருக்கும். சீக்கிரம் முடிந்த மாதிரி இருக்கும். நமக்கு வீட்டு கடனை அசல் ரூபாயில் வரவு வைக்க நல்ல உதவியாக இருக்கும்..
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்..
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.