நாளை அனைத்தும் முருகன் கோவிலில் சூரசம்ஹார நடக்க இருக்கின்றன, நாளை பழனியில் கோவிலில் நடக்க இருக்கும் விழாவின் விளக்கும், கந்தசஷ்டி விழா கடந்த வாரம் அக்டோபர் 25 காப்பு கட்டுதலுடன் தொடங்கின..
முருகன் தரிசனம்
நாளை காலை அதிகாலை 4.00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்க இருக்கின்றன. பிறகு மலைக்கு செல்லும் ரோப்கார் வசதி காலை 10:00 மணிக்கு நிறுத்துவதோடு, மற்றும் கட்டணம் சீட்டு முறையிலான அனைத்தும் காலை 11:00 நிறுத்தப்படும்.
படிப்பாதை வழியாக பக்தர்கள் 11:30 வரை அனுமதிக்கபடுவர்.. பிறகு மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜையுடன், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நடக்க கோயில் நடை சாத்தப்படும்..
இதனை தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தேவசேனாவுடன் முத்துக்குமார சுவாமி மயில் வாகனத்தில் மலை அடிவாரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் காட்சி தருவார்..
மலையில் இருந்து இறங்கும் சின்னகுமாரசுவாமி மாலை 6:00 மணிக்கு வடக்கு கிரி வீதியில் தாரகாசுரன் கிழக்கு கிரிவீதியில் பானு கோபன் தெற்கு தெருவில் சிங்கமுகா சூரனை மேற்கு கிரிவீதியில் சூரபத்மனை நான்கு சூரன்களையும் வதம் செய்யும் சூரசம்ஹார நடக்க இருக்கின்றன.
இதனை தொடர்ந்து ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவாக இரவு 9:00 மணியளவில், சம்ரோட்சன பூஜை நடக்கும். அதன்பிறகு அர்த்தஜாம பூஜைகள் நடக்கும்..
பிறகு அடுத்த நாள் காலை 9:30 மணியளவில் மலைக்கோயிலில் வள்ளி, தேவசேனாவுடன் சண்முகருக்கு, இரவு வேளையில் 7 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோவிலில் வள்ளி தேவசேனாவுடன் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கின்றது..